அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

ஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா

(உண்மையான நிழற்படம் அல்ல)

அரசாங்கத்தின் குறைந்தபட்ச தேவை மற்றும் அடிப்படை குறைந்த பட்ச சேவை  திட்டத்தின் மூலம் காசாங்காடு கிராமத்திற்கு ஆராம்ப சுகாதார நிலையம் வர இருகின்றது. பகுதி நேர சுகாதார நிலையமாக இருந்த மருத்துவ வசதி தற்போது முழு நேர ஆரம்ப சுகாதார நிலையமாக மாறியுள்ளது.
இந்நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா கோவில் தோப்பு பகுதியில் இன்று நமது மத்திய நிதி துறை இணை அமைச்சர் மாண்புமிகு திரு. பழனிமாணிக்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதன் மூலம் காசாங்காடு கிராமத்தானின் நீண்ட நாள் கனவு நினைவாகின்றது.

கிராமஅரசு மருத்துவமனை: http://history.kasangadu.com/aracu-aluvalakankal/utavi-maruttuvamanai
கிராம ஆரம்ப சுகாதார நிலையம்: http://history.kasangadu.com/aracu-aluvalakankal/arampa-cukatara-nilaiyam

ஆரம்ப சுகாதார நிலையத்தால் கிராமத்திற்கு கிடைக்கும் வசதிகள்:
  1. 24 மணி நேர மருத்துவ சேவை
  2. படுக்கை வசதி (4-6)
  3. ஒரு மருத்துவர்
  4. தொகுதி விரிவாக்க கல்வியாளர் (Block Extension Officer)
  5. மருந்துகலப்பவர்
  6. வாகன ஓட்டுனர்
  7. பரிசோதனை நுட்பவிலாளர்
  8. நோயாளிகளை கொண்டு வரும் வாகனம்
  9. சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள்
மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் அதை சிறப்புடன் இயங்க செய்வது காசாங்காடு கிராமத்தானாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 

முக்கியமாக இந்த சேவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைகின்றதா என்று கவனித்து கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.

இந்த வசதி காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும், காசாங்காடு கிராம மக்களுக்கும் இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

கிராம குழும இணைய சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/695e8ec761d90df4

திங்கள், பிப்ரவரி 21, 2011

இணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இலவசமாக பெரும் வசதி


காசாங்காடு கிராம மக்களுக்கு இணையம் மூலமாக இலவச தகவல் பெரும் வசதியை இணைய குழு ஏற்படுத்துகிறது. இதன் மூலம் காசாங்காடு கிராமம் சம்பந்தமான தகவல்களை அரசாங்கத்திளிரிந்து  / பொது சேவை நிறுவனங்களிருந்து பெற்று வெளியிடப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தகவல் கேட்கும் படிவம்http://rti.kasangadu.com/takaval-urimai-cevai
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை: http://rti.kasangadu.com/takaval-urimai-cevai/vinnappattin-nilai

இதன் மூலம் தனி நபரை அல்லது குடும்பங்களை மிரட்டுவதோ அல்லது வன்முறை செயல்களில் விண்ணப்பதாரரை ஈடுபடுத்துவதோ தவிர்கபடும். மேலும் விண்ணப்பதாரரின்  தனியுரிமை காக்கப்படும்.

இந்த சேவை காசாங்காடு கிராம மக்களுக்காக இலவசமாக வழங்கபடுகிறது. இதற்காக ஆகும் தபால், நீதிமன்ற செலவை கிராம இணைய குழு ஏற்று கொள்ளும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/a63f00799dd18ad3

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் பார்போம்.

கிராமத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அரசாங்கம் அளிக்கும் சலுகைகள், கிராம வரவு செலவு கணக்குகள், உள் கட்டமைப்பு, கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கணக்குகளும், செய்த பணிகளின் புகைப்படங்களும் பற்றி தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பொது தகவல் அதிகாரியிடம் கேட்டேன்.

மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மனுவை தபால் துறை அந்த இல்லாகாவிடம் சேர்த்த விபரம்: 

மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்ட ஒப்புகை மற்றும் கேட்ட தகவலை அனுப்ப கோரி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) இட்ட ஆணை:
முறையான இந்த மாவட்ட ஆட்சியரின் பதிலுக்கு எமது பணிவான நன்றிகள்.
உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)  ஒப்புகை கடிதமும் காசாங்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு பிறபித்த ஆணையும்:
அவ்வளவு தான் பதிலும் கிடைக்கவில்லை, தகவல் கொடுக்க இயலாமைக்கும் காரணமும் கொடுக்கவில்லை.

காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் தகவல் உரிமை சட்டத்தை எவ்வளவு மதிகின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.

51 நாள் ஆகியும் பதில் கிடைக்காத காரணத்தால் மேல் முறையீடு விண்ணப்பம் மாவட்ட அட்சியகத்திர்க்கு அனுப்பினேன்.

மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en

இன்னும் பதிலுக்காக வழிமேல் விழி வைத்து கத்து கொண்டிருகின்றேன்.

இதுவே தகவல் உரிமை சட்டத்தில் ஒரு இந்திய கிராமத்தானின் நிலைமை.

இதற்க்கு பதில் கிடைக்காததால் மேலும் பல தகவல் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிருக்கும் என நம்புகிறேன்.

இந்த விண்ணப்பத்தில் மேலும் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன் முடிவு தான் என்ன? என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தாங்களும் எங்கள் கிராமம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனின் எங்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்யுங்கள். தங்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தபடுகின்றதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பத்திரிக்கைகளுக்கு: மேலும் இது சம்பந்தமாக மேலும் தகவல் வேண்டுமெனின் press@kasangadu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். 

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/295e46ecc180be15?hl=ta

சனி, பிப்ரவரி 05, 2011

தெற்குதெரு தியாகுவேளான்வீடு சுப்பிரமணியன் காமாட்சி இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: 7 பிப்ரவரி 2011 09:00 முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: மணமகன் இல்லம், தெற்குதெரு, காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். இராமமூர்த்தி
மணமகன் வீட்டின் பெயர்: தியாகுவேளான்வீடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சுப்பிரமணியன் & திருமதி. காமாட்சி

மணமகள் பெயர்: செல்வி. ஜெயந்தி
மணமகள் ஊரின் பெயர்: தாமரன்கோட்டை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சாமிநாதன் & திருமதி. விஜயலட்சுமி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

அரசாங்க திருமண பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

கிராம குழும விவாத சுட்டி:  http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/5a9ebda3f55f8c1a

நடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவனீதம் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: 7 பெப்ரவரி 2011, 09:00 முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு கிராம ஊராட்சி திருமண அரங்கம்

மணமகன் பெயர்: செல்வன். குமார் என்கிற மதிவாணன்
மணமகன் வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. நவனீதம்
மணமகன் தொழில் விபரம்: உரிமையாளர், குட்லக் பேரங்காடி, சிங்கப்பூர்

மணமகள் பெயர்: சுமதி
மணமகள் ஊரின் பெயர்: நடுத்தெரு, புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. இராசு & திருமதி. தமிழரசி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

அரசாங்க திருமண பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/410238c9db2e4c17

கீழத்தெரு சின்னவேளான்வீடு சுவாமிநாதன் மாரியம்மாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: தை திங்கள் 23 ஆம் நாள் 09:30 அளவில் [ 6 பிப்ரவரி 2011 ]
திருமணம் நடக்கும் இடம்: கோமள விலாஸ் திருமண மண்டபம், பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். ரெங்கதுரை
மணமகன் ஊரின் பெயர்: திட்டக்குடி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. அடைக்கலம் திருமதி. விக்டோரியா
மணமகன் தொழில் விபரம்: கணினி பொறியாளர், ஐக்கிய இராச்சியம் 

மணமகள் பெயர்: செல்வி. பிரியதர்ஷினி
மணமகள் வீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு, காசாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: சுவாமிநாதன் மாரியம்மாள்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

அரசாங்க திருமண பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/8cb5e0e47c964ed2

வியாழன், பிப்ரவரி 03, 2011

சூரியகதிர் பத்திரிக்கையில் - காசாங்காடு கிராமத்தை பற்றிய கட்டுரை


சென்னையை சேர்ந்த சூரியகதிர் பத்திரிக்கை காசாங்காடு கிராம பற்றி இரு பக்கங்களுக்கு சிறிய கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் காசாங்காடு கிராம இணையதளத்திளிரிந்து செகரிக்கபட்டவை.

கட்டுரையின் தலைப்பு: "Role Model" கிராமம்

சம்பந்தமாக படிக்க: http://article.kasangadu.com/curiyakatir-pattirikkai

இணைய குழு கிராமத்திற்கு இலவச இதழ்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது. விருப்பமுள்ளோர் இணைய படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.

இலவச இதழ் படிவம்: https://spreadsheets.google.com/viewform?hl=en&formkey=dGx4U1NyLWhJa1ItWG5yc09vbnhVUFE6MQ#gid=0

தகவல் உதவி: திரு. கவிமணி, சூரியகதிர் நிருபர், சென்னை


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/fc499f4fcf2afdec