அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

முனியன் கோவில் கணக்கு தணிக்கை விபரங்கள்

சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி உருவாக காரணமாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள். காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றி உள்ள அனைத்து பொது மக்களின் பங்கும் இதில் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.

விரிவான கணக்கு தணிக்கை விபரங்கள் தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://rti.kasangadu.com/muniyan-kovil-kanakkukal

கணக்கு சுருக்கம்:


.

1காசாங்காடு - கீழத்தெருரூ 61,752.00

2காசாங்காடு - தெற்குதெருரூ 23,050.00
.
3காசாங்காடு - நடுத்தெரு & பிலாவடிகொல்லைரூ 248,576.00
.
4காசாங்காடு - மேலத்தெருரூ 73,956.00
.
5காசாங்காடு - ரெகுநாதபுரம்ரூ 5,300.00
.
6காசாங்காடு - வடக்குத்தெருரூ 43,826.00
.
7வெளியூர்ரூ 30,551.00
.
8சிலம்பவேளாங்காடுரூ 45,700.00
.
9நாட்டுச்சாலைரூ 12,100.00
.
10மன்னங்காடுரூ 3,300.00
.
11வாட்டாகுடிரூ 2,101.00
.
12புலவஞ்சிரூ 3,000.00
.
13சிங்கப்பூர்ரூ 10,000.00
.
உண்டியல்ரூ 54,736.00
.
.
மொத்த வரவு:ரூ 617,948.00
.
.
மொத்த செலவு:ரூ 512,067.00
.
.
மீதி இருப்பு தொகை:ரூ 105,881.௦௦


மிக கடின உழைப்புடன் முயற்சி செய்து இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்த குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

நிறைகள், குறைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு
குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949760c3f7f42edf

புதன், ஆகஸ்ட் 25, 2010

நடுத்தெரு மணிமேகலை முருகையன் இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி வருடம் ஆவணி மாதம், 20 (5 செப்டம்பர் 2010) 11:00  மணிக்கு மேல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம் பற்றிய விவரம்: V.P.S திருமண அரங்கம், வடசேரி சாலை, பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். கருணாநிதி
மணமகன் வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. முருகையன் & திருமதி. மணிமேகலை
மணமகன் தொழில் விபரம்: பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள்  ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வேதாசலம் & திருமதி. சுலோமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/173f58f1a021613b

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

வடக்குதெரு திரு.பஞ்சநாதன்- திருமதி.திலகவதி இல்ல திருமணம்





திருமண தேதி மற்றும் நேரம்: ஆவணி மாதம் 6 ஆம் தேதி (22/08/2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சித் திருமண அரங்கம் 

மணமகன் பெயர்: அ.இராஜகுமார் DME., B.Tech 
மணமகன் ஊரின் பெயர்: மன்னங்காடு-வடக்கு 
மணமகன் பெற்றோர் பெயர்: திரு.அருணாசலம்-திருமதி.பஞ்சாட்சரம் 
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): பொறியாளர் 
மணமகன் தொடர்பு எண்: 9943759093 

மணமகள் பெயர்: ப.தீபா D.Pharm
மணமகள் வீட்டின்/ஊரின் பெயர்: வெள்ளேரியன்வீடு, வடக்கு தெரு 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு.பஞ்சநாதன்-திருமதி.திலகவதி 
மணமகள் தொழில் விபரம் (இருந்தால்): மருந்தாளுநர் 

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்
  
தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/8a6ff3bae3d6bfd1

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

அறுபத்து நான்காம் சுதந்திர தின வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய அறுபத்து நான்காம் சுதந்திர தின வாழ்த்துக்கள். முழுமையான சுதந்திரத்தை ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்க வழி வகுப்போம். காசாங்காடு கிராமம் முன்னோடியாக அமைய உறுதுணையாக இருப்போம்.

(2010) சுதந்திர தின விழாவில்:
பிரதமரின் ஆங்கில உரையின் அசல் தகவல்கள்: http://www.ndtv.com/article/india/complete-text-of-pm-s-independence-day-address-44512
மாநில முதலமைச்சரின் தகவல்கள்: http://www.dinamani.com/edition/print.aspx?artid=287927

கடந்த ஆண்டு (2009) சுதந்திர தின விழாவில்:
பிரதமர் ஆற்றிய உரை: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=107064&SectionID=128
மாநில முதலமைச்சர் ஆற்றிய உரை: http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0908/15/1090815024_1.htm

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/58796110c92e5063

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

தண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இன்று காலை அருள்மிகு மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் உதவி: திரு. கிருஷ்ணன், காசாங்காடு


கிராம குழு விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949dbf4b4670aa92

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

அருள்மிகு மின்னடியார்,அருள்மிகு நொண்டிமுனியன் திருப்பணி

இன்று (02/08/2010) இரவு 7.00 மணியளவில் காசாங்காடு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் 11 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மின்னடியார் மற்றும் 7 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நொண்டி முனியன் சாமி சிலைகளின் கண்திறப்பும், சுடுமண்ணால் செய்த அருள்மிகு முனீஸ்வரர் சாமி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்திறப்பு மற்றும் சிறப்புவழிபாடும் செய்யப்பட உள்ளது. அது சமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்துகொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்,
ஆலய பொதுநிர்வாகக்குழு மற்றும் கிராமவாசிகள்

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fd2b6bdac69fb1e