அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், ஜூன் 24, 2010

முருகையன் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) காலை 07:30 முதல்  09:30 வரை
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மண்டபம், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. அறிவழகி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: பஞ்சாம்வீடு, காசாங்காடு
மணமகள்  பெற்றோர் பெயர்: முருகையன் குடும்பத்தினர்


மணமகன் பெயர்: செல்வன். செந்தமிழ்செல்வன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகன்  பெற்றோர் பெயர்: பெற்றோர் பெயர் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.சிறப்பு அம்சம்: வரதட்சணை இல்லாமல் நடந்த திருமணம்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

புதன், ஜூன் 23, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு - கிராம பங்கேற்ப்பு

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று கோவையில் துவங்கியது. கிராமத்தில் இருந்து இரண்டு பேருந்து நிறைய மக்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்கள்.

செம்மொழி மாநாடு இணைய தளம்: http://ulakathamizhchemmozhi.org/

அங்கு நடக்கும் நிகழ்சிகளை நேரடியாக இணையத்தில் காணாலாம். அதன் சுட்டி இங்கே.


நன்றி.

வெள்ளி, ஜூன் 18, 2010

வீராசாமி ரெத்தினம்பாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) காலை 07:30 முதல்  09:30 வரை
திருமணம் நடக்கும் இடம்: அருள்மிகு சுவாமிநாத சுவாமி சன்னதி, சுவாமிமலை

வரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) மாலை 05:30 அளவில்
வரவேற்ப்பு நடக்கும் இடம்: கன்ஸ்சரஸ் திருமண மகால், தஞ்சாவூர்

மணமகன் பெயர்: செல்வன். மாரிமுத்து
மணமகன் வீட்டின் பெயர்: சுந்தாம் வீடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. வீராசாமி & திருமதி. ரெத்தினம்பாள்
மணமகன் தொழில் விபரம்: மருத்துவர்

மணமகள் பெயர்: செல்வி. ஹேமா அகிலாண்டேஸ்வரி
மணமகள்  ஊரின் பெயர்: அண்ணா நகர், தஞ்சாவூர்
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சரன்தாசன் & திருமதி. சேது
மணமகள் தொழில் விபரம்: மருத்துவர்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூன் 17, 2010

சுப்பிரமணியன் வளர்மதி இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆனி 3 [17 சூன் 2010]
திருமணம் நடக்கும் இடம்: 
அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில், பட்டுக்கோட்டை


மணமகள் பெயர்: செல்வி. ஜெயா
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: பொன்னாங்கண்ணி வீடு, நடுத்தெரு

மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சுப்பிரமணியன் & திருமதி. வளர்மதி

மணமகன் பெயர்: செல்வன். பிரபாகரன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: சூரப்பள்ளம்
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. பிரமைய்யன் & திருமதி. தமிழ்மணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


புதன், ஜூன் 16, 2010

அருணாசலம் லக்ஷ்மி இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆனி 3 [17 சூன் 2010]
திருமணம் நடக்கும் இடம்: நியூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டல், மயிலாப்பூர், சென்னை

வரவேற்ப்பு தேதி: விக்ருதி, ஆனி 6 [20 சூன் 2010]
வரவேற்ப்பு நடக்கும் இடம்: ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். துரையரசன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: அம்மிவீடு, பிலாவடிகொல்லை
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. அருணாசலம் & திருமதி. லக்ஷ்மி
மணமகன் தொழில் விபரம்: Project Manager, Polaris Software Limited. Chennai.

மணமகள் பெயர்: செல்வி. ஜெயலக்ஷ்மி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: அசோக் நகர், சென்னை
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. ராமசந்திரன் & திருமதி. உமாமகேஸ்வரி
மணமகள் தொழில் விபரம்: Project Manager, Wipro Technologies, Chennai


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 13, 2010

கிராமத்தில் அரசு தொழில்களின் மொழி கலவை

கிராமத்தில் அரசால் இயக்கி வரும் "BSNL" தொலைபேசி நிறுவனத்தின் தொலைபேசி சேவையின் ஒரு வாசிப்பு இது. "இந்த  தொலைபேசி எண் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்". என்ன ஒரு சுத்தமான தமிழ் !!!! .

மிகவும் சிரமத்துடன் மக்களின் முயற்சியில் இந்த தொலைபேசி இணைப்பகம் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழ் தமிழ்" என்று மக்களுக்கு அரசு புகட்டும் முன், தனது நிர்வாகத்தில் எடுத்துக்காட்டாக அமைந்தால் நன்றாக அமையும்.

சமீபத்தில் செம்மொழிக்கு வெளிவந்த ஒளிதோற்றத்தை காண்போம். எங்கள் செம்மொழியில் முன்பு வடமொழி சொற்கள் மற்றும் எழுத்துக்கள் நிறைய புகுந்து விட்டது. தற்போது ஆங்கில சொற்கள்.தகவல் உதவி: திரு. ராமசுப்ரமணியன், சென்னை

வியாழன், ஜூன் 10, 2010

கிராமத்தினரின் "பெண்ணின் பெருமை" என்ற கவிதை படைப்பிற்கு பாராட்டு


சிங்கப்பூரில் நடந்த மகளிர் தின சிறப்பு கவிச்சோலையில், "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் பதினைந்து கவிஞர்கள் கவிதை படைத்தனர். இருவரின் சிறந்த படைப்புகள் தேர்ந்தேடுக்கபட்டதில், காசாங்காடு கிராமத்தை சேர்ந்த கவிஞர். அமிர்தலிங்கம் அவர்கள் ஒருவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதுபற்றி தினமலரில் வெளிவந்த செய்தியின் சுட்டி இங்கே.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4067&Country_name=South%20East%20Asia&cat=new

அந்த கவிதை இங்கே.

http://article.kasangadu.com/kavitai/kavinar-amirtalinkam/pennin-perumai


>>>>>>>>>>>>>>>>
சிங்கப்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் இலக்கிய நிகழ்வு மார்ச் 07ம் தேதியன்று மாலை மகளிர் தின சிறப்பு கவிச்சோலையாக மலர்ந்தது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்புப் பேச்சாளர் புலவர் அரங்க நெடுமாறனை அறிமுகப்படுத்தினார். முதல் அங்கமாக படித்த, பிடித்த, வடித்த கவிதைகளைக் கவிஞர்கள் படித்தனர். இம்மாதக் கவிதைப் போட்டியின் தலைப்பு, பெண்ணின் பெருமை.
5 பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பதினைந்து கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்தனர். இவர்களில் கவிஞர் கி.கோவிந்தராசு, காசாங்காடு அமிர்தலிங்கம், சுப.சத்தியமூர்த்தி ஆகியோரின் படைப்புக்கள் இம்மாத சிறந்த கவிதைப் படைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது. அரங்க நெடுமாறன் பரிசளித்துச் சிறப்பித்தார். கேரளக் கவிஞர் செருதுருத்தி உன்னிகிருஷ்ணன் தமது கவிதையை மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் படைத்தார். இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் அரங்க நெடுமாறன் பெண்பாற் புலவர்கள் என்ற பொருளில் சுமார் ஒரு மணி நேரம் இசைச்சுவை கலந்த சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். கழகத் தலைவர் ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். செயலாளர் கவிஞர்.இராம.வைரவன் நன்றி நவில, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
>>>>>>>>>>>>>


கவிஞர் அவர்களுக்கு காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூன் 03, 2010

பெரியாச்சி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்பிள்ளையார் குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரியாச்சி கோவில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கீழத்தெரு திரு.கோவிந்தசாமி தலைமையில் அக்கோவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு  இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு.பாலசுப்பிரமணியன், காசாங்காடு