அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஜனவரி 26, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்


காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் குடியரசு தின வாழ்த்துக்கள்.

வியாழன், ஜனவரி 20, 2011

நிரந்தர கை தொலைபேசி எண் பெற்றுக்கொள்ள இன்று முதல் தொடங்குகிறது


பெருகி வரும் கை தொலைபேசி நிறுவனங்கள் மூலம் வெவ்வேறு நிறுவனங்களுக்கு தனது கை தொலைபேசி எண்களை மாற்றும் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிரந்தரமாக ஒரே தொலைபேசி எண்ணை தக்க வைத்து கொள்வதிற்கு வசதிகளை செய்துள்ளது.

ஒரு கை தொலைபேசி நிறுவனத்திலிரிந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற ஆகும் செலவு ரூ. 20 ஆகும்.

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

http://indiatoday.intoday.in/site/Story/127176/India/pm-launches-nationwide-mobile-number-portability.html
http://www.ndtv.com/article/india/mobile-number-portability-switch-operators-keep-your-number-80612

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/5b0802442f4cf553

முத்தமிழ் மன்றம் நடத்திய பத்தாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா


நிழற்படங்கள் நிகழ்படங்களாய் ....முத்தமிழ் மன்றம் நடத்திய பத்தாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா  இரண்டு நாட்கள்(16  & 17) வெகு சிறப்பாக நடந்து முடிந்தது, இதில் பள்ளி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் விழாவில்  பங்கு கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு. 

தகவல் உதவி: திரு. சிலம்பரசன்


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/9ef0ce565f3c8392

செவ்வாய், ஜனவரி 18, 2011

சமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது

சமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது. 35 கிராமங்கள் இதன் மூலம் பயனடைய கூடும்.
தளத்தை சரிபார்க்க மற்றும் மேம்படுத்த உதவி அத்தனை நண்பர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய குழுவின் சார்பாக நன்றிகள்.

திருமண வலைதளத்தின் தொடர்பு:   http://matrimony.musugundan.com/

பதிவு செய்து தங்களுக்கு தெரிந்த வரன்களை அவர்களின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது திருமண தளம் வேறு திருமண தளங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட சில முக்கியமான தகவல்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

  1. எவ்வித கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை. யாரும் தாங்களிடம் இது சம்பந்தமாக தாங்களிடம் கட்டணம் கேட்டல் கொடுக்க வேண்டாம்.
  2. இது முசுகுந்த சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே.
  3. இங்கு வரன்களின் பற்றிய தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகிறது.
  4. வரன்களை தற்போதைய தொடர்பு கொள்ளுதல் முறைகளில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இணையம் வழியாக தொடர்பு கொள்ள அனுமதி இல்லை.
  5. உங்களுடைய தொடர்புகள் சம்பந்தமான தகவல்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
  6. தாங்களுடைய தகவல்கள் சரிபார்த்தபின் அனைவரின் பார்வைக்கு வெளியிடப்படும்.
மிகவும் கவனத்துடன் இந்த சேவையை பயன்படுத்தவும்.

பயன்படுத்துவதில் சிரமமும் அல்லது தளத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காசாங்காடு கிராம மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.

கிராம குழும இணைய சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/13401e93d9d55adb

திங்கள், ஜனவரி 17, 2011

கிராமத்தில் மூன்று இடங்களில் விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் மூன்று இடங்களில் சிறுவர்கள் முதல் முதியர்வர்கள் வரை பங்குபெற்று மகிழ்ச்சி அடையும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது.

கோவிலடி நண்பர்கள்
முத்தமிழ் மன்றம்
ஊராட்சி மன்றம்

அனைவரும் பங்குபெற்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

இது சம்பந்தமாக நிழற்படங்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fe649de44e92283

சனி, ஜனவரி 15, 2011

சாலை சீரமைப்பு - காசாங்காடு ஊராட்சி - போகி பண்டிகை திருநாளில்

பொதுவாக ஒரு நிர்வாகம் ஒரு வேலை செய்யும்  போது  பொதுமக்களின் குறைவான இடையூறு கருதி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நாளான போகி பண்டிகை அன்று ஊர் மக்கள் வரிசைகள் செய்வதும், வாங்குவதும் மறு நாள் பொங்கலுக்காக விரைந்து செயல்படக்கூடிய தேவைகள் அதிகம் உள்ள நாள். பொது மக்கள் சாலைகளை மிகவும் பயன்படுத்த கூடிய நாள்.

காசாங்காடு ஊராட்சி நிர்வாகம் மும்முராமாக போகி பண்டிகை நாளன்று சாலை தோண்டும் இயந்திரத்தை கொண்டு சாலைகளை பெயர்த்து சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது அல்லது இப்பணியை ஒப்பந்தம் செய்தவர் செய்தாலும் அதை பண்டிகை நாட்கள் முடிந்து செய்யவும் என்று அறிவுறுத்தவும் இல்லை.


இது போன்ற ஊராட்சி தலைவர் கொண்ட நிர்வாகம் நம் கிராமத்திற்கு தேவையா?

இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகங்கள் எவ்வாறு பொது மக்களின் நலன் கருதி ஒவ்வொரு திட்டத்தையும் செய்கின்றார்கள் என்பதற்கு ஒரு கிராமத்தின் இது போன்ற செயல்களே ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

வருடத்தில் 365 நாட்கள் இருக்கையில்  ஒரு திருநாளில் தான் இந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை பார்க்கையில் மிகவும் வியப்பாக உள்ளது.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/dd10626f11baef35

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !


பொங்கல் வைக்க நல்ல நேரம்:  7:30-08:00
வழிபட நல்ல நேரம்:  10:30 - 12:00

சமையல் சுட்டிகள்:

சர்க்கரை பொங்கல்: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல்: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுக்கறி குழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/ec0db846b41ff419

வெள்ளி, ஜனவரி 14, 2011

இனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்பழையவை கழிதலும் புதியன புகுதலும்...

இந்த ஆண்டில் உள்ள கேட்ட குணங்களோ , மூட நம்பிக்கையோ, குடிப் பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ …மறந்து / மறைந்து … புதிய ஆண்டில் ஒரு நல்லணாகவோ அல்லது நல்லவளாகவோ மாறவேண்டும் என்பது தான் போகி பண்டிகையை கொண்டாடும் திருநாள்.

கிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/9cea7358fcaef6ef

ஞாயிறு, ஜனவரி 09, 2011

இந்திய வாக்கு இயந்திரம் - செய்யக்கூடிய முறைகேடு - கிராம விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் பல வழிகளில் செய்யலாம். இது போன்ற நடைமுறை முறைகேடுகள் இதுவரை நடந்த தேர்தலில் நடந்ததுள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை. முறைகேடுகள் செய்யும் வழிகளை ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுளனர். இதன் மூலம்,

  1. தாங்கள் வாக்களிக்கும் போது வாக்களிப்பை மாற்றலாம்.
  2. வாக்கு பதிவு முடிந்த பிறகு, அனைத்து வாக்கையும் மொத்தமாக வேறு ஒரு வேட்பாளாருக்கு மாற்றலாம்.

இதை சரி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வேறு வழிகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது.

கிராம மக்களியாகிய நாம் அளிக்கும் வாக்குகளில் கூட இது போன்று முறைகேடுகள் நடக்க கூடும்.

மேலும் விபரங்கள் கீழ்க்கண்ட இணையத்தில் காணலாம்.

http://indiaevm.org/கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/116dd4e4b00f0e1c

ஞாயிறு, ஜனவரி 02, 2011

மேலத்தெரு அவையாம்வீட்டு ஐயா. வீரப்பன் அவர்களுக்கு வேலை ஓய்வு பாராட்டு விழா

காசாங்காடு கிராமம், மேலத்தெரு அவையாம்வீட்டை சேர்ந்த ஐயா. வீரப்பன் அவர்களுக்கு இன்று வேலை ஓய்வு பாராட்டு  விழா காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கில் நடைபெறுகிறது. அனைவரும் பாராட்டு விழாவில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/249522c682565651

சனி, ஜனவரி 01, 2011

இனிய ஆங்கில புத்தாண்டு (2011) வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணைய குழுவின் புத்தாண்டு வாழ்த்துக்கள். காசாங்காடு கிராமம் வரும் வருடங்களில் அனைத்து துறைகளிலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/a0e8b59e5249a3f8