அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம நிர்வாக கேவலம்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் தொடரும் தொடரே இது.

இது சம்பந்தமான முந்தைய தகவல்.


தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் கேலி கூத்தாக அமைந்துள்ளது.

விண்ணப்பதாரர் தகவல் கேட்டு அனுப்பியுள்ள விண்ணப்பத்திற்கு காசாங்காடு கிராம நிர்வாககிகள் அதே பெயர் கொண்ட நபரின் வீட்டிற்கு நேரடியாக சென்று   கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதில் சம்பந்த பட்டவர்,

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, காத்தான்வீடு கணக்கபிள்ளை என்று அழைக்கப்படும் திரு.வீரப்பன் அவர்களின் மகன் திரு. ஜெயவேல்.
திரு.ஜெயவேல் காசாங்காடு கிராம மக்கள் நல பணியாளாராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரோடு மற்றொவரும் துணை சென்றுள்ளார். அவரை பற்றிய தகவல் கிடைத்ததும் விபரங்கள் வெளியிடப்படும்.

இந்த செயல் மக்கள் நல பணியாளரின் செயல் போன்று தோன்றவில்லை. அமைதியாக இருக்கும் கிராம சூழ்நிலைகளில் மக்களை மிரட்டும் பணியாக  தான் தெரிகின்றது.

  1. யார் இவர்களுக்கு விண்ணப்பதாரரின் வீடு புகுந்து கேள்வி கேட்கும்  அதிகாரம் / உரிமையை வழங்கியது?
  2. இவ்வாறு தான் காசாங்காடு நிர்வாகம் கிராமத்தை நிர்வகிகின்றதா? அல்லது மக்களுக்கு நல பணியாளாராக சேவை செய்கின்றாரா?
  3. ஒரு வருடம் ஆகியும் கிராம கணக்குகளை தர முடியாத நிலையில், இவர்கள் பொது சொத்துகளிலும் அரசாங்க பணத்திலும் ஊழல் செய்துள்ளார்களா? அல்லது கணக்குகளை சரி செய்கின்றார்களா?
  4. தனது பதவி காலம் முடியும் வரை இவ்வாறு தள்ளி போட்டு அடுத்து வரும் கிராம தலைவர் மீது இந்த சுமையை தள்ளி விடும் முயற்சி என்பதும் இதில் புலானாகின்றது.

நேர்மையான நிர்வாகமாக இருந்தால் விண்ணப்பத்தாரர் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர எந்த விண்ணப்பாதரரின் வீட்டிற்க்கும் சென்று பேரம்/குறுக்குவழி கேட்கவேண்டியதில்லை. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பற்றிய தெளிவான விளக்கம் வேண்டுமெனின் நிர்வாகத்தின் அதிகாரிகளை அல்லது விண்ணப்பத்தாரரை விண்ணபத்தின் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இது காசாங்காடு கிராம நிர்வாகத்திற்கு மட்டும் ஏற்பட்ட அவலம் அல்ல, ஒவ்வொரு காசாங்காடு கிராம குடிமகன்களுக்கும் ஏற்பட்டுள்ள அவலம். எங்கள் கிராமம் இப்படி தான் என்று எங்கள் கிராம நிர்வாகிகள் வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் விதம்.

கிராமத்தை பற்றிய தகவல் கேட்கும் ஒவ்வொரு இந்திய குடிமகன்களிடமும் கிராம நிர்வாகம் பற்றி நேர்மையை விளக்கும் விதமும் ஆகும்.

காசாங்காடு கிராம நிர்வாகம் மூலம் உங்களின் அமைதியான வாழ்வில் இடர்பாடுகளின் நடந்திருப்பின் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை: