அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, நவம்பர் 13, 2011

கிராம நிர்வாக செயல்கள்


கிராமத்தில் தற்போது நடக்கும் நிர்வாக செயல்கள் பற்றி பொது மக்களிடம் கேட்டறிந்தோம்:

  1. பிள்ளையார் கோவில் தெரு மக்களுக்கு குடிநீர் வசதி சரி செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  2. குடி தண்ணீர் வீணாகும் குழாய்கள் சரி செய்யபடுகின்றன.
  3. மின்சார கம்பிகளை தடுக்கும் மர கிளைகள் கிராம முழுவது சரி செய்யபடுகின்றது. இதன் மூலம் மின்சார கசிவு தவிர்க்கப்படும். இதன் மூலம் குறுகிய சுற்று மின் கசிவுகளினால் ஏற்படும் மின் தடை தவிர்க்கபடுகின்றது. அநாவசியமாக மரங்கள் வெட்டபடுவது பற்றிய புகார்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
  4. கிராமம் முழுவதும் மழை தண்ணீர் விரைவாக வடிய, வடிகால்கள் சரி செய்யபடுகின்றது.

எதிர்வரும் செயல்கள்:

  1. அரசு பள்ளிகளுக்கு நிழலில் வாகனங்கள் நிறுத்தும் வசதி. தற்போது வாகனங்கள் திறந்த வெளியிளியே நிறுத்தபடுகின்றது.
  2. குழந்தைகளுக்கு பூங்கா
  3. நூலகத்தில் இணைய வசதி.
  4. நூலகத்தில் கிராமத்தினருக்கு கம்பியில்லா இணைய வசதி. (Free Wi-Fi)
முயற்சி செய்யும் அனைத்து கிராம மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
கிராம மேம்பாட்டிற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

 தகவல்கள் தவறாக / பிழைகள்  இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை: