அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூலை 07, 2013

2011 அக்டோபர் - இன்று வரை கிராம நிர்வாகத்தின் முன்னேற்றங்கள்


கிராமத்தில் நேரடியாக கேட்டு பார்த்த முன்னேற்றங்கள்:

தண்ணீர்:

  1. தினசரி அதிகபட்சமாக 2 மணி நேரம் தண்ணீர் வழங்குதல்
  2. தெரு விழாக்கள், கிராம விழாக்கள், வீடு விழாக்கள் போது அதிகபட்சமாக 4 மணி நேரம் தண்ணீர் வழங்குதல்.
    1. இவை கிராமத்தில் தொண்டு தொற்று பழக்கமாக இருகின்றது.
24 மணி நேரம் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே கிராமத்தானின் கனவுகள்.



தெரு விளக்குகள்:


  1. கிராமத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் பயன்படுத்தும் முறையில் உள்ளன.
  2. 100% சதவிகிதம் தெரு விளக்குகள் முறையாக இயங்குகின்றன.
LED  விளக்குகள் தேவை, மின்சாரம் குறைவாக பயன்படுத்தவும், நீண்ட நாட்கள் விளக்குகள் பயன்படுத்தவும் இவை உதவும். தானியங்கி மாற்றிகள் (Automatic  switch) மின்சார தேவைகளை சரி செய்ய உதவும்.

சுகாதாரம்:

  1. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது
  2. கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்துதல்.
    1. இன்றும் சாலையோர மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பழக்கம் பழக்கத்தில் உள்ளது.
  3. சுகாதார விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகள், அறிவிப்பு தாள்கள்
சுற்று சூழல்:


  1. சாலையோரம் வேம்பு மரக்கன்றுகளை நடுதல்
  2. Plastic  பை உபயோகங்களை குறைக்க விழுப்புணர்வு ஏற்படுத்துதல்


கட்டுமான பணி:
  1. சிமிட்டி / தார் சாலை அமைத்தல்
    1. வண்ணான் / அம்பட்டன் / தச்சன் சாலை அமைத்தல்
  2. கட்டிடங்களை பராமரித்தல்
    1. அங்கன்வாடி
    2. நீர்த்தொட்டி
    3. நிர்வாக கட்டிடங்கள்
  3. புதிய கட்டிகம் 
    1. தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர்
    2. பஞ்சாயத்து நிழற்கூடம்
  4. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்
    1. ஏரிகளை தூர் வாருதல்
தேவையற்ற நிகழ்சிகள் / செயல்கள்:
  1. அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
  2. பதாகைகளின் எண்ணிக்கை அதிகம்
மேலும் விபரங்கள் விடுபட்டிருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை: