அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், மே 19, 2011

மாரியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாட திட்டம்


கடந்த இரண்டு வாரமாக கிராம மக்களால் ஒன்று கூடி (ஊர் கூட்டம்)  இந்த வருடம் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்சிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏதோ கடமைக்கு திருவிழா நடந்தது போல் இருந்ததை கவனத்தில் கொண்டு கிராம மக்களின் ஆண்மிக உணர்வை மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் சிறப்பாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சம்:
தேர் இழுத்து செல்லும் நிகழ்ச்சி, இரவு நேரங்களில் இல்லாமல் பகலில் நடத்தப்படும்.

இதற்காக ஆகும் செலவுகளை மாரியம்மன் கோவிலில் கிடைத்த உண்டியல் நிதி தொகை கொண்டும், வெளிநாட்டு வாழ் காசாங்காடு கிராம மக்களின் பங்கும் இதில் பெருமளவில் அமையும்.

இது பற்றி விரிவான தகவல்கள் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.

கிராமத்தில் ஆண்மிக உணர்வை மேம்படுத்த உதவி புரியும் நல்ல உள்ளங்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை: