அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மார்ச் 27, 2010

கிராம ஊராட்சி வெளியிட்ட மூன்று அறிவிப்புகள்

சமீபத்தில் கிராமத்தில் ஊராட்சி வெளியிட்ட மூன்று அறிவிப்புகளின் விபரங்கள்.

மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

2009-2010 க்கான

1. வீடு வரி
2. குடிநீர் வரி
3. கடை உரிமம்
4. தொழிற்சாலை உரிமம்

ஆகியவற்றை மார்ச் 31 க்குல் (நிலுவை இருந்தால் அதையும் சேர்த்து) செலுத்திடுமாறு கேட்டு கொள்கிறோம். தவறும் பட்சத்தில் செலுத்தாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி


மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

காசாங்காடு ஊராட்சியில் உள்ள ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை (குப்பைகள், மரங்கள், மட்டைகள், செங்கல் மற்றும் தேங்காய் மட்டை சோறு). இவ்வரிவுப்பு கிடைத்த ஒரு வார காலத்திற்குள் அகற்றிருமாறு கேட்டுகொள்கிறோம். அவ்வாறு இல்லையெனில் ஊராட்சி மன்றம் அவற்றை கையப்படுத்தி பொது ஏலத்தில் கொண்டு செல்லும் என தெரிவித்து கொள்கிறோம்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி


மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

தங்களுடைய தனி நபர் குடிநீர் இணைப்பில் சட்டத்திற்கு புறம்பாக நீரினை மோட்டார் வைத்து உறுஞ்சுவது, ஹோஸ் பைப் வைத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது, தோட்டம் வளர்ப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் உங்களது இணைப்பு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

ஏனெனில் வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் பற்றாகுறை, அதிகரிக்கின்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று நாட்களில் மேற்குறிய செயல்களை நிறுத்த வேண்டும் என் கேட்டு கொள்கிறோம்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி

கருத்துகள் இல்லை: