அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூலை 31, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசியாக கிடைத்த தகவல்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் முன்பு பார்த்தோம். அதன் தொடரே இது. இன்னும் பதில் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

இதுவே அதன் சுட்டி.


மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010 
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en
அனுப்பிய மனுவின் பதிலாக அனைத்து தரப்பிலும் மாவட்ட அலுவலகம், ஊராட்சி இயக்குனர் அலுவலகம், தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பதில் ரூபாய். 1100/- (550 பக்கங்களுக்கு, ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம்).

மனு அனுப்ப எவ்வளவு தொகை என்று அனுப்புவதற்கு இதுவரை சரியாக 250 நாட்கள் ஆகியுள்ளது. 13 நவம்பர் 2010  க்குள் பதில் அனுப்பினால் மட்டுமே அதற்கான தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இல்லையெனில் தகவல் உரிமை சட்டம் 2005  கீழ் எந்த வித தொகையையும் விண்ணபதாரர் செலுத்த தேவையில்லை


பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவல்களை அளிக்க தவறுமிடத்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005,   பிரிவு 7, உட்பிரிவு 5 இன் படி நிர்ணநியிக்கபட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு கேட்கப்பட்டுள்ள தகவலை அளிக்க வேண்டும்.

இந்த மனுவின் மூலம் தனது கடமையை செய்ய தவறிய காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் காசாங்காடு கிராமத்திற்கு ரூபாய். 1100 /- இழப்பீடு செய்துள்ளார். இது போன்று எத்தனை இழப்பீடுகள் என்று தெரியவில்லை. கிராமத்தின் விபரங்கள் தெரிந்தால் தான் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.

மேலும் கேட்கப்பட்டுள்ள தொகைக்கு எந்த வித விபரமும் இல்லை. எப்படி மதுக்கூர் ஒன்றியம் இந்த தொகையை முடிவு செய்துள்ளது என்பதை விண்ணபதாரருக்கு தெளிவாக அளிக்க வேண்டும். 

இந்த சட்டத்தை பற்றிய தெரியாத அரசு அதிகாரிகளுக்கு / மக்கள் பிரதிநிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகலம் அவர்களுக்கு தேவையான கல்வியை அளிக்குமாறு பரிந்துரைகின்றேன். மேலும் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் இலவசமாக அளிக்குமாறு  கேட்டுகொள்கிறேன்.

மதுக்கூர் ஒன்றிய அனுப்பியுள்ள தகவலின் மின்னணு பிரதி உங்கள் பார்வைக்கு.


தகவல் மூலம்: கண்ணையன்


கருத்துகள் இல்லை: