அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஜனவரி 15, 2011

சாலை சீரமைப்பு - காசாங்காடு ஊராட்சி - போகி பண்டிகை திருநாளில்

பொதுவாக ஒரு நிர்வாகம் ஒரு வேலை செய்யும்  போது  பொதுமக்களின் குறைவான இடையூறு கருதி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நாளான போகி பண்டிகை அன்று ஊர் மக்கள் வரிசைகள் செய்வதும், வாங்குவதும் மறு நாள் பொங்கலுக்காக விரைந்து செயல்படக்கூடிய தேவைகள் அதிகம் உள்ள நாள். பொது மக்கள் சாலைகளை மிகவும் பயன்படுத்த கூடிய நாள்.

காசாங்காடு ஊராட்சி நிர்வாகம் மும்முராமாக போகி பண்டிகை நாளன்று சாலை தோண்டும் இயந்திரத்தை கொண்டு சாலைகளை பெயர்த்து சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது அல்லது இப்பணியை ஒப்பந்தம் செய்தவர் செய்தாலும் அதை பண்டிகை நாட்கள் முடிந்து செய்யவும் என்று அறிவுறுத்தவும் இல்லை.


இது போன்ற ஊராட்சி தலைவர் கொண்ட நிர்வாகம் நம் கிராமத்திற்கு தேவையா?

இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகங்கள் எவ்வாறு பொது மக்களின் நலன் கருதி ஒவ்வொரு திட்டத்தையும் செய்கின்றார்கள் என்பதற்கு ஒரு கிராமத்தின் இது போன்ற செயல்களே ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

வருடத்தில் 365 நாட்கள் இருக்கையில்  ஒரு திருநாளில் தான் இந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை பார்க்கையில் மிகவும் வியப்பாக உள்ளது.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/dd10626f11baef35

கருத்துகள் இல்லை: